சிதைவு (Decay): நாள்பட்ட உணவுப்பொருட்கள் அழுகிப் போவது போல , தேய்ந்து,, வீணாகி, சீரான நிலையில் இருந்து மாறுதல்.
தடயவியல் (Forensics): சட்ட பூர்வமானநடவடிக்கைகளுக்கு அறிவியல் அறிவைப் பயன்படுத்துதல்.
நுண்மையான /நுட்பமான (Microscopic): புற உதவிகளின்றி கண்களால் காண முடியாத அளவிற்கு நுண்ணிய.
கையும் களவுமாக பிடிபட்ட ஒரு திருடன் பதற்றத்தில், மேசையிலிருந்த, கனமான காகிதங்கள் பறக்காமல் இருக்க வைக்கப்படும் எடையை எடுத்து வீட்டு உரிமையாளரின் தலையில் அடித்து அவரை அசர்ந்தப்பமாக கொன்றுவிடுகிறான். பின்னர் கூடத்தில் இருந்த வெப்பமண்டல அலங்காரச் செடிகள் வளர்ந்திருந்த பூந்தொட்டிகளில் தடுக்கி விழுந்து எழுந்து விரைவாக வீட்டிலிருந்து வெளியேறுகிறான். சில மணி நேரங்களிலேயே திருடிய வங்கி கடன் அட்டையை பயன்படுத்தியபோது அவன் கைது செய்யப்படுகிறான், ஆனால் தான் அந்த அட்டைகளை கண்டெடுத்தாகவும் கொலை நடந்த இடத்தில் தானில்லவே இல்லை என்றும் திருடன் வாதிடுகிறான்,
மகரந்தங்களை கொண்டு திருடர்களை,, சட்ட விரோதமான போதை மருந்து விற்பவர்களை, கொலைகாரர்களை, தீவிரவாதிகளை ஏன் கண்டுபிடிக்க முடியாத குற்றங்களிலொன்றான போலி மருந்து விற்பனை செய்பவர்களை கூட கண்டுபிடிக்கலாம் என்பது பலருக்கு வியப்பளிக்கும் மகரந்தங்கள் என்பவை மஞ்சள் பொடிகளாக மலர்களிலிருந்து தேனீக்கள் சேகரிப்பது அல்லது தாவரங்கள் தங்களது இனப்பெருக்க நிகழ்வை முடித்து நாம் அன்றாடம் உண்ணும் கனிகளையும் விதைகளையும் கொடுக்க உதவும் துகள்கள் என்று மட்டுமே பலருக்கு தெரிந்திருக்கும். காற்றின் நுண்துகள்களால் உண்டாகும் ஒவ்வாமை சுரத்தினால் அவதிப்படும் சிலர் மகரந்தங்களை வெறுக்கலாம், ஏனெனில் இவை மூக்கிலும் கண்களிலும் நீர் வடிய செய்து அவதிப்படுத்தும். ஆனால் மகரந்த தடயங்களில் ஆய்வு செய்யும் உயிரியலாளர்களுக்கு டி.என்.ஏ, விரல் ரேகை பதிவுகள்,துப்பாக்கி குண்டுகளின் எச்சங்களை போலவே குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிய இந்த நுண்ணிய மகரந்த துகள்கள் மிக முக்கியமான தடயங்களாகின்றன.
மகரந்தங்கள் முக்கிய சாட்சிகளாக நீதிமன்றங்களில் பயன்படுவதும், மகரந்தங்களில் ஆய்வு செய்வோர் பேலினாலஜிஸ்ட் (palynologist) எனப்படுவார்கள் என்பதையும் நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள்.மேலும் மகரந்தங்களை கொண்டு குற்றங்களை துப்பு துலக்கி குற்றவாளிகளை கொலைகார்களை, திருடர்களை மற்றும் போதை மருந்து வியாபாரிகளை கண்டுபிடிக்க உதவி, உலகை பாதுகாப்பான இடமாக மாற்றும் தடயவியல் மகரந்த ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதையும் கூட அறிந்திருக்க மாட்டீர்கள் .ஏனெனில் இது மிக புதிதான ஒரு தடயவியல் தொழில்நுட்பம் .நியூசிலாந்து போன்ற சில நாடுகளில் இம்முறை பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்தாலும் தற்போது தான் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இம்முறை பரவலாக பயன்பாட்டுக்கு வர துவங்கி உள்ளது அமெரிக்காவில் இன்னும் இது பரவலாக நடைமுறைக்கு வந்திருக்கவில்லை
முதன்முதலாக 1959’ ல்தான் ஒரு கொலைக் குற்றத்தை கண்டுபிடிக்க மகரந்தம் ஆஸ்திரேலியாவில் உபயோகப்படுத்தப்பட்டது. அதன் பிறகு மிக நுட்பமான குற்றங்களை கூட மகரந்தங்கள் துப்புத் துலக்கியிருக்கின்றன.
உதாரணமாக அமெரிக்க பண்ணை மானியத் திட்டம், தேனீ வளர்ப்பவர்களி டமிருந்து விற்கப்படாத தேன் அனைத்தையும் நியாயமான சந்தை விலையில் வாங்குவதாக உறுதியளித்திருக்கிறது. அமெரிக்க தேனுக்கான விலை அதிகரிக்கையில், ஒரு சில நியாயமற்ற தேன் உற்பத்தியாளர்கள் மலிவான, சீன அல்லது அர்ஜென்டினா தேனை அதிக விலைக்கு அரசிடம் விற்க முனைவார்கள். இந்த மலிவு தேனிலிருகும் மகரந்தங்களை, சோதித்து எங்கிருந்து அந்த தேன் உற்பத்தியானது என்பதை கண்டறியலாம். தற்போது அமெரிக்காவில் இம்முறையில் அமெரிக்க தேன் மானிய நிறுவனம், தரமான தேனை சரியான விலைக்கு வாங்குகிறார்கள்
பல வகையான தாவரங்கள் மகரந்தங்களையும் சிதல் விதைகள் எனப்படும் ஸ்போர்களையும் ஏராளமாக பலவேறு அளவுகளிலும் வடிவங்களிலும் உருவாக்கி காற்றில் வெளியிடுகின்றன, காற்றின் விசையால் எடுத்து செல்லப்படும் இந்த நுண்துகள்கள் நிலத்தில் மகரந்த மழையென பொழிகின்றன.பல இடங்களில் மிக அதிக அளவில் பொழியும் இந்த மழையினால் நிலமும் நீர்நிலைகளும் மஞ்சள் குளித்துக் கொண்டிருக்கும் இவற்றிலிருந்து அந்த நிலத்தின் தாவர வகைகளையும், எந்த வகையான மகரந்தங்கள் விழுந்திருக்கின்றன என்றும் துல்லியமாக அளவிட்டுவிட முடியாதெனினும், இந்த பரவல், அந்த நிலத்தின் மகரந்த அச்சாக கருதப்படும். பிறகு இந்த மகரந்த அச்சுக்களிலிருந்து ஒரு குறிப்பிட்ட நிலத்தை அடையாளம் காணமுடியும்.
மகரந்தங்களும் சிதல்விதைகளும் மிக நுண்ணியவைகளாக இருப்பதால் இவை எந்த இடத்திலும் சிக்கிக்கொண்டு விடும், சொல்லப்போனால் பெரும்பாலான மகரந்தங்களை நுண்ணோக்கியில்லாமல் கண்களால் பார்க்க முடியாத அளவிற்கு நுண்ணியதாக இருக்கும். மகரந்தங்களின் அளவுகளை பொருத்து பல ஆயிரம் நுண்ணிய மகரந்தங்களை ஒரு குண்டூசியின் கூர் நுனியில் கூட நம்மால் அமைத்துவிட முடியும். எனவே ஒரு மனிதன் தன் உடைகளில் எவ்வளவு மகரந்தம் இருக்குமென்று அறிந்திருக்க முடியாது. ஒரு குற்றவாளி தன் ஆடையிலும் உடைமைகளிலும் இருக்கும் மகரந்தங்களை ஒருபோதும் முற்றிலும் நீக்கிவிட முடியாது.ஒரு தடயவியல் மகரந்த ஆய்வாளர் ஆய்வுக்கு வந்திருக்கும் மகரந்தங்கள் எங்கிருந்து கிடைத்தது என்பதன் அடிப்படையில் குற்றம் நடைபெற்ற இடத்திலிருந்து அல்லது குற்ற்றவாளியிடமிருந்து கிடைத்த மகரந்தங்களை குற்றத்துடன் ஒருவனை தொடர்புபடுத்தும் சாட்சியாக, ஆவணமாக பயன்படுத்த முடியும்.
இப்போது நீங்கள் மகரந்தங்களை நீரில் கழுவியோ அல்லது வேறு முறைகளை பயன்படுத்தியோ நீக்கிவிடலாமென்று நினைத்தால், இல்லை முடியாது. ஏனெனில் மகரந்தங்களை அழிப்பது மிக மிக கடினம் அவை எளிதில் சிதைவடைவதில்லை. அதாவது குற்றம் நடந்த இடங்களில் இருக்கும் மகரந்தங்கள் பல ஆண்டுகள், பல நூற்றாண்டுகள், ஏன் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் கூட அப்படியே, அங்கேயே அழியாமல் இருக்கும், குற்றம் நடந்த இடங்களிலிருந்து கவனமாகவும் முறையாகவும் சேகரிக்கப்பட்ட மகரந்தங்கள் பல வருடங்கள் கழித்தும், மீண்டும் குற்ற புலனாய்வில் உபயோகப்படும்
பூமியில் சுமார் பதினைந்து லட்சம் வகையான தாவரங்கள் மகரந்தங்களையும் செதில் விதைகளையும் உருவாக்குகின்றன. அதிர்ஷ்டவசமாக இவை உருவாக்கும் மகரந்தங்களை எந்த தாய் செடியிலிருந்து வந்தன என்று அடையாளம் காணமுடியும். சாதாரணமாக பள்ளி கல்லூரிகளில் ஆய்வகங்களில் உபயோகிக்கும் ஒளி நுண்ணோக்கிகளிலேயே மகரந்தங்களை ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்தி காணமுடியும். எனினும் மிக நெருங்கிய தொடர்பிலுள்ள தாவரங்களிலிருந்து உருவான அல்லது மிக நெருங்கிய பேரினங்களின், ஒன்று போலவே தோன்றும் மகரந்தங்களை துல்லியமாக அடையாளம் காண மேலும் சக்திவாய்ந்த நுண்ணோக்கிகள் தேவைப்படுகின்றன.இதுபோன்ற சமயங்களில் மகரந்த ஆய்வாளர்கள் SEM எனப்படும் ஸ்கேன் மின்ம நுண்ணோக்கி அல்லது TEM எனப்டும் ட்ரான்ஸ்மிஷன் மின்ம நுண்ணோக்கிகளை உபயோகிப்பார்கள்
நீங்களே பார்க்கலாம். மகரந்தங்களின் புகைப்படத்தொகுப்பை உங்களுக்கென இங்கே தொகுத்தளித்திருக்கிறோம். சித்திரங்களை பெரிது படுத்தியும் பார்க்கலாம்.
மகரந்தங்கள் குறித்த ஆய்வுகள் தொடருகின்றன. ஒவ்வொரு நாளும் மகரந்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்குட்படுத்த பட்டு முறையாக வரிசைப்படுத்தப்பட்டு சேமிக்கப்படுகின்றன. மகரந்த ஆய்வாளர்கள் மகரந்த துகள்களை முன்பு குற்றவியல் விசாரணைகளில் உபயோகபடுத்தியதை போலவே இனியும் உபயோகித்து குற்றங்களின் மர்மங்களை கண்டறிய உதவுவார்கள்.
சில மகரந்த ஆய்வாளர்கள் மறைந்த பண்டைய நாகரீகங்களையும், எண்ணெய் வளங்களையும் ஆய்வு செய்யும் விஞ்ஞானிகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.மற்றும் சிலர் வரலாற்று சிறப்பு மிக்க ஓவியங்களை ஆய்வுசெய்கிறார்கள் அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உதவுகிறார்கள்.மகரந்தங்களை குறித்து மென்மேலும் அறிகையில்,இயற்கையின் நுண் தடயங்களான இவற்றின் பயன்பாடுகளையும் நிச்சயமாக விரிவாக்கலாம்.
Vaughn Bryant and Gretchen Jones. (2022, March 18). மகரந்தங்கள்: இயற்கையின் நுண்தடயங்கள், (லோகமாதேவி, Trans.). ASU - Ask A Biologist. Retrieved January 12, 2025 from https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Vaughn Bryant and Gretchen Jones. "மகரந்தங்கள்: இயற்கையின் நுண்தடயங்கள்", Translated by லோகமாதேவி. ASU - Ask A Biologist. 18 March, 2022. https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
Vaughn Bryant and Gretchen Jones. "மகரந்தங்கள்: இயற்கையின் நுண்தடயங்கள்", Trans. லோகமாதேவி. ASU - Ask A Biologist. 18 Mar 2022. ASU - Ask A Biologist, Web. 12 Jan 2025. https://askabiologist.asu.edu/tamil/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D
பல அளவுகளில், சிறப்பான வடிவங்களில் இருக்கும் மகரந்த துகள்களை பெரிதாக காண: Pollen Zoom Gallery
By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.