கிளாஸ்ட்ரிடியம் டிஃபிசில் சக்திவாய்ந்த நுண்ணோக்கியில் தெரிகிறது. மனிதர்களுக்கு மோசமான வயிற்றுப்போக்கை உருவாக்கும் இந்த பாக்டீரியா இயற்கையாகவே பல நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டது. சித்திரம்; CDC.
சில பாக்டீரியாக்கள் இயற்கையாகவே நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கு எதிரான பாதுகாப்பை கொண்டிருக்கும். அப்படியான பாதுகாப்பு முறையில் ஒன்றாக சில பாக்டீரியாக்கள் நுண்ணுயிர்க்கொல்லியை அழிக்கும் வேதிப்பொருளை கொண்டிருக்கும். நுண்ணுயிர்க்கொல்லி பாக்டீரியாவை நெருங்குகையில் அவை அந்த வேதிப்பொருளை வெளிவிடும். இதனால் அந்த நுண்ணுயிர்க்கொல்லி வேலை செய்வதை நிறுத்திவிடும்.
மற்றோரு பாதுகாப்பு முறையாக, தங்களது புரதத்தின் அமைப்பை மாற்றிக்கொள்ளுவதன் மூலமும் நுண்ணுயிர்க்கொல்லிகள் தங்களின் வெளிப்புறத்தை அணுகாதவாறு பாக்டீரியாக்கள் பாதுகாத்துக்கொள்கின்றன. சில பாக்டீரியாக்கள் ஏற்பிகளின் அமைப்பை மாற்றியமைத்து நுண்ணுயிர்கொல்லிகள் அதனுடன் இணைவதை தடுக்கின்றன. இணைய முடியவில்லை எனில் அழிக்கவும் முடியாது.
மிக சாதாரணமாக காணக்கிடைக்கும் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்ட பாக்டீரியாவாக மனிதர்களுக்கு வயிற்றுப்போக்கை உண்டாக்கும் கிளாஸ்ட்ரிடியம் டெஃபிசில் என்பதை சொல்லலாம். கிளாஸ்ட்ரிடியம் டெஃபிசில் தனது புரத வடிவத்தை மாற்றியமைப்பது மற்றும் வேதிச்செயல்கள் ஆகிய இரண்டு வழிகளின் மூலமும் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறன் பெற்று பிற பாக்டீரியாக்களுக்காக நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை எடுத்துக்கொள்ளும் மனிதர்கள் உடலில் வாழ்கின்றன.
சில சமயங்களில் ஒரு பாக்டீரியம் பல்கிப்பெருகுகையில் அந்த பாக்டீரியத்தின் டிஎன்ஏ தவறுதலாக நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்டிருக்கும் மரபணுவை உருவாக்கிவிடும். ஒவ்வொரு பாக்டீரிய பெருகுதலின் போதும் இப்படியான பிறழ்வு மரபணு உருவாகும் சாத்தியம் இருக்கிறது. பாக்டீரியாக்கள் மிக அதிக அளவில் பல்கிப்பெருகுவதால் பிறழ்வுகள் உண்டாகும் வாய்ப்புக்களும் மிக அதிகமாகவே இருக்கின்றன.
இந்த சித்திரத்தில் வான்கோமைசின் என்னும் நுண்ணுயிர்க்கொல்லிக்கு எதிராக பல விதமான எதிர்ப்புதிறனை கொண்டிருக்கும் இருவகையான பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன. சித்திரம் ; CDC.
இவ்வகையான எதிர்ப்புத்திறன் VRE எனப்படும் வான்கோமைசின் என்னும் நுண்ணுயிர்க்கொல்லிக்கு எதிர்ப்புத்திறன் கொண்டிருக்கும் எண்டரோகாக்கை பாக்டீரியாவில் நிகழ்ந்தது. சுமார் 30 வருடங்களாக இருந்துவரும் இந்த VRE பாக்டீரியாவில் பல ஆய்வுகள் நடந்திருக்கின்றன. உண்மையிள் விஞ்ஞானிகள் இந்த பாக்டீரியாக்கள் எவ்வாறு வான்கோமைசினை எதிர்க்கின்றன என்பதன் அடிப்படையில் இவற்றின் பல வகைகளை குழுக்களாக பிரித்திருக்கின்றனர். இவற்றில் இரண்டு வகைகளான VanA மற்றும் VanB, ஆகியவற்றின் டிஎன்ஏ வில் நிகழ்ந்த பிறழ்வினால் இந்த எதிர்ப்புத்திறன் உருவாகியிருக்கிறது. இந்த பிறழ்வு வான்கோமைசினுக்கு எதிரான திறனை இந்த பாக்டீரியாக்களுக்கு அளித்திருக்கிறது
சில பாக்டீரியாக்கள் பிற பாக்டீரியாக்களிலிருந்து கிடைமட்ட மரபணு பரிமாற்றம் (HGT). மூலமக இந்த எதிர்ப்புத்திறனை பெற்றுக்கொள்கின்றன. HGT என அழைக்கப்படும் இந்த பரிமாற்றம் மூன்று வழிகளில் நிகழ்கிறது.
கிடைமட்ட மரபணு பரிமாற்றம் மூலமாக ஒரு பாக்டீரியத்துக்கு கிடைத்த மரபணு எப்போதுமே எதிர்ப்புத்திறனை கொண்டிருக்காது எனினும் அவை எப்போதெல்லாம் எதிர்ப்புத்திறன் கொண்டிருக்கிறதோ அப்போதெல்லாம் நுண்ணுயிர்க்கொல்லி எதிரப்பு பாக்டீரியாக்களை பெருமளவில் மனிதர்களுக்கிடையே பரப்புகின்றது.
மிக ஆபத்தான, அதிகமாக பரவியிருக்கிற கார்பாபீனம் எதிர்ப்புதிறன் கொண்ட எண்ட்டரோ பாக்டீரியா (CRE) இதுபோல நுண்ணூயிர் எதிர்ப்பு பாக்டீரியாக்களை கிடைமட்ட பரிமாற்றம் மூலமாக பரப்புவதில் பெயர் பெற்றது இந்த CRE நமது இரத்த ஓட்டத்தில், காயங்களில் மற்றும் சிறுநீர்த் தாரையில் நோய்த்தொற்றை பரப்பும். மேலும் இது அழிப்பதற்கு கடினமான பாக்டீரியாக்களில் ஒன்றும் கூட. ஏனெனில் இவை அனைத்து விதமான நுண்ணுயிர்க்கொல்லிகளுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்டிருப்பவை.
By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.