நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC): அமெரிக்க மக்களை நோய் தொடர்பான ஆரோக்கிய கேடுகளிருந்து காப்பாற்றவும்.நோய் குறித்தான கவனம் மற்றும் பாதுகாப்புக்கெனவும் இயங்கும் ஒரு அரசு நிறுவனம்.
பல மருந்து எதிர்ப்புத்திறன் (Multi-drug resistant): தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகள் பலவிதமான நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுக்கும் எதிர்ப்புத்திறன் கொண்டிருத்தல்.
பாக்டீரியாக்களின் பல வகைகள் எதிர்ப்புத்திறன் கொண்டிருப்பவை ஆனால் அவற்றில் மிக ஆபத்தான ஒன்று பல மருந்து எதிர்ப்புத்திறன் கொண்டிருக்கும் காசநோய் உண்டாக்கும் பாக்டீரியாதான். (MDR TB). காசநோய் என்பது பாக்டீரியாக்கள் ஒரு மனிதனின் நுரையீரலில் தங்கிவிடும் நோய். உடலின் இயற்கையான நோயெதிர்ப்பு சக்தி அந்த பாக்டீரியாக்களை அழிக்கச் செய்யும் பலவிதமான முயற்சியில் உடலின் சில பகுதிகளும் சேதமடைந்துவிடும். எவ்வளவு அதிக காலம் காசநோய் உடலில் தங்கி இருக்குமோ அத்தனை அதிகமாக நோயெதிர்ப்பு சக்தி உடலுடன் போராடிக்கொண்டே இருக்கும்.
சில காசநோய் வகைகளில் குணமாகிக்கொண்டிருக்கும் நுரையீரலின் பகுதிகளில் கால்சியம் படிவுகள் படிந்திருக்கும். இவை நுரையீரலில் தழும்புகளை உருவாக்கி அதன் செயல்திறனை வெகுவாக குறைத்து விடும்.; சித்திரம்; Yale Rosen.
எனவே மருத்துவர்கள் எவ்வளவு விரைவாக காசநோய் கிருமியை வெளியேற்ற முடியுமோ அதற்கேற்றாற்போல் நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளை பரிந்துரைப்பார்கள். ஒருவருக்கு இவ்வாறான பலமருந்து எதிர்ப்புத்திறன் கொண்டிருக்கும் காசநோய் தாக்கி இருந்தால் அது மிகவும் ஆபத்தானதாகும் இந்த பாக்டீரியா மருத்துவர்கள் பரிந்துரைக்கும் பெரும்பாலான வீரியமிக்க மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறனை கொண்டிருக்கும். எனவே அது நோயாளியின் உடலில் நீண்ட காலத்துக்கு தங்கி இருக்கும். நாளடைவில் நோயெதிர்ப்புச்சக்தி தொடர்ந்து காசநோய்க் கிருமியுடன் போராடிக்கொண்டே இருப்பதால் அந்த நோயாளியும் பாதிப்பிற்குள்ளாகி அவரது ஆரோக்கியம் குறைந்துகொண்டே வரும்
நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மையங்கள் (CDC) வருடத்துக்கு 2 மில்லியன் மக்கள் இவ்வாறான நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்புத்திறன் கொண்டிருக்கும் பாக்டீரியா தொற்றூக்கு ஆளாகிறார்கள் என்று கணிக்கிறது. இவர்களில் 23000 மக்கள் வருடாவருடம் நோய்த்தொற்றினால் இறந்து விடுகிறார்கள்
மொத்தத்தில் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் 20-35 பில்லியன் டாலர்கள் இந்த வகை பாக்டீரியாக்களுக்கென செலவிடப்படுகிறது. இந்த தொகையை கொண்டு உலகத்தின் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் இரண்டு பெரிய சாக்கலேட் கட்டிகளை வாங்கி விடலாம்.
கூடுதல் சித்திரங்கள்; விக்கி மீடியா காமன்ஸ் வழி
மைக்கோபேக்டீரியம் சித்திரம்; NIAID.
By volunteering, or simply sending us feedback on the site. Scientists, teachers, writers, illustrators, and translators are all important to the program. If you are interested in helping with the website we have a Volunteers page to get the process started.